முட்டைக்கான இறக்குமதி வரி குறைப்பு!
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒரு கிலோகிராமிற்கான வரி நேற்றிரவு(18) முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1,300.00 ரூபாவாக இருந்த முட்டைக்கான வரி 200.00 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இவ்விடயத்தினை அறிவித்துள்ளார். இதன்படி நாட்டின் எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ, குறித்த விலைக்கு முட்டையை இறக்குமதி செய்ய முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment