Posts

வந்தாறுமூலை மயில்தங்கிய மலை நந்தீச்சரர் திருக்கோயிலில் இடம்பெற்ற பிரதோச பூசை.

Image
(மூலையூரான்) மட்டக்களப்பு வந்தாறுமூலை ஈரளக்குளம் வாத்திரவட்டை திருவருள்மிகு ஆதி பரமேசுபரி உடனுறை மயில்தங்கிய மலை நந்தீச்சரர் திருக்கோயிலிலில் மாதம் தோறும் இடம்பெறும் சிவனுடையை சிறப்புமிகு விரதமாக கொள்ளப்படும் பிரதோச விரத பூசை இன்று (19) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றுள்ளது. திருக்கோயில் அருட்சுனையரான பிரபாகரன் தலைமையில் காலை 10.00 மணியளவில் அபிசேகம் இடம்பெற்றதோடு , தொடர்ந்து 12.30 மணியளவில் அர்ச்சனை, தீபாராதனை, சிவபுராணம் படித்தல், பிரசாதம் வழங்கப்பட்டு பூசை நிறைவு பெற்றது. இங்கு பூசைகள் செந்தமிழ் ஆகம முறையில் இடம்பெறுவது சிறப்பம்சமாகும். குறித்த பூசையானது வந்தாறுமூலையை சேர்ந்த திரு. சு.காசிநாதன் குடும்பத்தினரால் சிறப்பாக இடம்பெற்றதுடன் சிவனடியார்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முட்டைக்கான இறக்குமதி வரி குறைப்பு!

Image
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒரு கிலோகிராமிற்கான வரி நேற்றிரவு(18) முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1,300.00 ரூபாவாக இருந்த முட்டைக்கான வரி 200.00 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இவ்விடயத்தினை அறிவித்துள்ளார். இதன்படி நாட்டின்  எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ, குறித்த விலைக்கு முட்டையை இறக்குமதி செய்ய முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.